ஆட்டைத் திருமணம் செய்யப்போகும் 74 வயது நபர்

74-years-old-man-Goatபிரேஸில் நாட்டைச் சேர்ந்த 74 வய­தான முதி­யவர் ஒருவர் தான் வளர்க்கும் ஆடு ஒன்­றினை திரு­மணம் செய்­ய­வுள்ளார்.

கல் அறுக்கும் தொழில் செய்த 74 வய­தான அப­ரெ­சிடோ கஸ்­டல்டோ என்ற முதி­ய­வரே தான் வளர்க்கும் ஆட்­டினை திரு­மணம் செய்­யப்­போ­கிறார். இந்த ஆடு கார்­மெ­லிடா என அழைக்­கப்­ப­டு­கி­றது.

4 தட­வைகள் 4 பெண்­களை திரு­மணம் செய்து 4 பெண் மற்றும் 4 ஆண் குழந்­தை­க­ளுக்கு தந்­தை­யா­க­வுள்ள கஸ்­டல்டோ தனது இறுதி நாள் வரை 2 வரு­டங்­க­ளாக தான் அன்பு செலுத்தும் ஆட்­டுடன் வாழ்­வ­தற்கு தீர்­மா­னித்­துள்ளார்.

இந்த ஜோடி எதிர்­வரும் ஒக்­டோபர் மாதம் 13ஆம் திகதி ஜுன்­டியய் நக­ரி­லுள்ள தேவா­லயம் ஒன்றில் திரு­மணம் செய்­து­கொள்­ள­வுள்­ளனர்.

இது தொடர்பில் மனை­வி­களை இழந்த கஸ்­டல்டோ கூறு­கையில், “நான் ஏதோ தவறு செய்­வ­தாக சில கூறு­கி­றார்கள். ஆடு பேசாது, பொருட்கள் வாங்க பணம் கேட்­காது மற்றும் கர்ப்­பமும் தரிக்­காது. அத­னுடன் நிச்­ச­ய­மாக உட­லு­றவில் ஈடு­ப­ட­மாட்டேன் என நான் உறு­தி­யாகக் கூறு­கிறேன்” எனத் தெரி­வித்­துள்ளார்.

திரு­ம­ணத்­திற்­காக முதல் வழங்­கிய ஆடையை கார்­ம­லிடா சாப்­பிட்­டு­விட்­டது. இருப்­பினும் இரண்­டா­வ­தாக அதன் ஆடையை தெரிவு செய்­து­விட்­டது எனவும் கஸ்­டல்டோ கூறி­யுள்ளார்.

திரு­ம­ணத்­தி­னை­ய­டுத்து பெரிய விருந்­து­ப­சார நிகழ்வும் ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளதாம். இந்த ஜோடியின் திரு­மணம் ஒரு முழு ­நி­றை­வான திரு­மண­மாக இருக்­காது என இத்திருமணத்தை நடத்தி வைக்கவுள்ள பிஷப் கூறியுள்ளார்.

Tags: ,

Leave a Reply