இளம் விமானியின் உயிரைப் பறித்த ரிமோட் ‘கொன்ட்ரோல்’ விமானம்

remoteஇளம் விமானி ஒருவர் தான் செலுத்­திய தொலைத்­தூர கட்­டுப்­பாட்டுக் கருவி (ரிமோட் கொன்ட்ரோல்) மூலம் இயங்கும் விமானம் ஒன்று கட்­டுப்­பாட்டை இழக்க, அது அவரின் பறித்த பரி­தா­ப­க­ர­மான சம்­ப­வமொன்று அமெரிக்­காவின் நியூயோர்க் நகரில் அண்­மை­யில்­ இ­டம்­பெற்­றுள்­ளது.

எவிட் ஆர்.சி ஹெலி­கொப்டர் விமா­னத்தைச் செலுத்­து­வதில் ஆர்­வ­மிக்க, நியூயோர்க் நகரைச் சேர்ந்­த ­ரொமன் பிரை­யோஷெக் என்ற 19 வய­தான இளை­ஞரே இவ்­வி­பத்தில் உயி­ரி­ழந்­த­வ­ராவார்.

ஆர்.சி ரக சிறி­ய­ள­வி­லான விமா­னங்­களை தயா­ரித்து அபா­ய­க­ர­மான நுணுக்­கங்களை செய்து பார்ப்­பதில் ஆர்­வ­மிக்க பிரை­யோஷெக், சம்­பவ தினத்­தன்று மாலை­வே­ளையில் தனது ஆர்.சி 1500 மாதி­ரி­யினை செலுத்­தி­யுள்ளார்.

இதன்­போது ரிமோட் கட்­டுப்­பாட்டை இழக்க 6 இறாத்தல் நிறை­யு­டைய விமானம் அவ­ரது தலையில் வீழ்ந்­துள்­ளது. குறித்த ஹெலி­கொப்டர் நிமி­டத்­திற்கு 2200 தட­வைகள் சுற்­றக்­கூ­டிய 62 அங்குல நீளமான சுழ­லியைக் கொண்­டது.

இதனால் அவ­ரது மண்­டை­யோட்டின் ஒரு பகு­தி­யையும் கழுத்தையும், சுழலி வெட்ட அவ்­வி­டத்­தி­லேயே அவர் உயி­ரி­ழந்­துள்ளார். இச்­சம்­ப­வத்தின் போது அவ­ரது தந்­தையும் அங்கு இருந்­துள்ளார்.

இவரே இப்­பொ­ழு­து­போக்கு பழக்­கத்தை தனது மக­னுக்கு அறி­மு­கப்­ப­டுத்தி வைத்­த­தாக பிரை­யோஷெக்கின் குடும்­பத்­தினர் தெரி­வித்­துள்­ளனர்.ஆர்.சி ஹெலி­கொப்­டரில் தீவிரமாக ஈடுபட்ட இந்த இளைஞர் பல முறை தனது துணுக்குகளை யூ டியூப் இணையத்தளத்தில் பகிர்ந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Tags: 

Leave a Reply