சுவிஸ் தூதரக பணியாளர் பிணையில் விடுதலை

கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தினால் இன்று பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.

பொய்யான சாட்சியம் அளித்து அரசாங்கத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தினார் என்ற குற்றச்சாட்டில், சுவிஸ் தூதரக பணியாளர் கானியர் பனிஸ்டர் பிரான்சிஸ் கடந்த 16ஆம் நாள் குற்ற விசாரணைத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டார்.

அவரது விளக்கமறியல் காலம் முடிந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்ட போது, 5 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு பேரின் பிணையுடன் செல்ல நீதிவான் அனுமதி அளித்தார்.

இவரது கைது நடவடிக்கையினால் சிறிலங்கா – சுவிஸ் அரசாங்கங்களுக்கிடையில் முறுகல் நிலை ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!