இலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் – நாரயணசுவாமி

narayanasamyஇலங்கை விவகாரம் குறித்து பிரதமர் மன்மோகன் சிங் இறுதித் தீர்மானம் எடுப்பார் என இந்திய மத்திய அமைச்சர் நாரயணசுவாமி தெரிவித்துள்ளார். குறிப்பாக பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வில் பங்கேற்பது மற்றும் இலங்கைக்கு இரண்டு யுத்தக் கப்பல்களை வழங்குதல் ஆகியன தொடர்பில் பிரதமரே இறுதித் தீர்மானம் எடுப்பார் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்கும் மத்திய அரசாங்கத்தின் திட்டத்திற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன. இந்த விடயம் குறித்து பிரதமருக்கு அறிவிக்கப்படும் என நாரயணசுவாமி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு யுத்தக் கப்பல்களை வழங்குவதன் மூலம் தமிழக மீனவர்களுக்கு எவ்வித நன்மையும் கிடைக்கப் போவதில்லை என திராவிட முன்னேற்கக் கழகம் அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையானது இலங்கை வாழ் தமிழர்களுக்கோ அல்லது இந்திய மீனவர்களுக்கோ நன்மையை ஏற்படுத்தாது என கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

தமிழக அரசியல் கட்சிகள் ஒருமித்த குரலில் பிரதமர் அமர்வுகளில் பங்கேற்கக் கூடாது என கோரி வருவதாகவும், உரிய நேரத்தில் பிரதமர் சரியான தீர்மானம் எடுப்பார் எனவும் தெரிவித்துள்ளது.

Tags: , ,

Leave a Reply