விடுதலைப்புலிகளின் உதவியுடனேயே 2005 அரசாங்கம் ஆட்சி அமைத்தது : ஐ.தே.க.

akila-viraj-kariyawasamஐக்கிய தேசியக்கட்சி அரசாங்கத்தினை அமைக்கும் என்பது வெறும் வார்த்தையல்ல அடுத்த ஆண்டில் அரசாங்கத்தினை அமைப்பதற்கான ஒரு ஆரம்பமாகவே இம்முறை மாகாண சபைத் தேர்தல்கள் அமையப் போகின்றன என்று ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்தார்.

வடக்கில் விடுதலைப் புலிகளுடன் இணைந்து ஆட்சியமைக்க ஐக்கிய தேசியக்கட்சி முயல்கின்றதென அரசாங்கம் குறிப்பிடுகின்றது. ஆனால் கடந்த தேர்தலில் புலிகளின் உதவியோடே அரசாங்கம் ஆட்சி அமைத்தது என்பதையும் மறந்து விடக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இராஜகிரியவில் நேற்று ஐக்கிய தேசியக்கட்சியினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்தார்.

Tags: , ,

Leave a Reply