ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லெட் கனணிகள் தற்கால மனித வாழ்வோடு பின்னிபிணைந்து விட்டன.
இப்போது இவற்றை அறியாதவர் எவரும் இல்லையெனலாம்.
அழைப்புகளை மேற்கொள்ளுதல், குறுந்தகவல்களை அனுப்புதல் போன்ற அடிப்படையான தகவல் பரிமாற்ற செயற்பாடுகளுக்கு அப்பால் பல வழிகளில் ஸ்மார்ட் போன்கள் மற்றும் டெப்லட்கள் நமக்கு உபயோகமாக உள்ளன.
இந்நிலையில் போரிலும் டெப்லெட் கணனியை உபயோகப்படுத்த முடியுமென்பது சிரிய போராளிகளிடமிருந்து உறுதியாகியுள்ளது.
ஆம், அப்பிள் நிறுவனத்தின் ஐபேட்டினை சிரிய போராளிகள் உபயோகிக்கும் படங்கள் மற்றும் காணொளி ஆகியன இணையத்தில் வெளியாகியுள்ளன.
ஒரு படத்தில் சிரிய போராளிகளில் இலக்கினை நோக்கி சரியான கோணத்தில் தாக்கும் பொருட்டு ஐபேட்டினை உபயோகிக்கின்றமை காட்டப்பட்டுள்ளது.
இதேபோல் கடந்த ஜூன் மாதம் வெளியாகிய காணொளியொன்றில் சிரிய போராளிகள் ஐபேட்டில் மெப்பினை உபயோகிப்பது வெளியாகியிருந்து.
இலக்கினை நோக்கி துள்ளியமாக தாக்குதல் நடத்தும் பொருட்டே ஐபேட்டினை உபயோகிக்கின்றமை தெரியவந்திருந்தது.
இவற்றின் மூலம் சிரிய படைகள் தொழில்நுட்ப ரீதியாக முன்னேறியுள்ளதாக கருதவேண்டியுள்ளது.
அதேபோல் அமெரிக்க சிரியாவிற்குள் நுழைந்து மறைமுகமாக போராளிகளை இயக்குகின்றதா என்ற கேள்வியும் மனதில் தோன்றவே செய்கின்றது.
















