கடந்த முப்பது வருடங்காள தனிநாடு கோரிப் போராட்டம் நடத்தப்பட்ட வடக்கு கிகழ்கில் பல முக்கிய சம்பங்கள் இடம்பெற்ற வடக்கு மாகாகணத்தில் தேர்தல் நடக்கிறது.
முக்கியமாக முள்ளிவாய்க்கால் யுத்தம் முடிவுற்று நான்கு ஆண்டுகள் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களை அரசியல் நெருக்கடிக்கும் தள்ளும் நோக்கில் இலங்கை அரசால் இந்த தேர்தர் நடத்தப்படுகிறது.
இலங்கையில் மாகாண சபை முறைமைய அறிமுகப்ப்படுத்தபட்ட பின்னர் வடக்கில் நடக்கும் முதல் தேர்தல் இது.
கடந்த முறை தமிழர் மண்ணில் நடந்த தேர்தல்களைப் போலன்றி இம்முறை மக்கள் ஈடுபாட்டுடன் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
அதேவேளை இந்தத் தேர்தலில் அரசாங்கம் தாம் வெல்லுவதற்காக பல்வேறு நடவடிக்கைகளையும் மேற்கொகள்ள களத்தில் இராணுவத்தையும் புலனாய்வாளர்களையும் அரசாங்கம் கட்டவிழ்த்துள்ளது.
தேர்தல் வாக்குச் சாவடிகளுக்கு அருகாமையில் காணப்படும் புலனாய்வாளர்கள் மக்களை கடுமையாக மிரட்டிக் கொண்டு இருப்பதாக களத்தில் உள்ள குளோபல் தமிழ்ச் செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கட்சிகளின் தோர்தல் முகவர்களை வாக்குச் சாவடிகளுக்குச் செல்ல படைப் புலனாய்வாளர்களும் படையினரும் அனுமதிக்கவில்லை. கடுமையான பதட்டம் நிலவுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.
இவற்றையும் தாண்டி வன்னிப் பகுதியில் மக்கள் வாக்களித்து வருகின்றனர். தேர்தலை முன்னிட்டு இராணுவப்பிரசன்னங்களாலும் தலையீடுகளாலும் வடக்கு பதற்ற முகத்துடன் இருக்கிறது.
குளோபல் தமிழ் விசேட செய்தியாளர்
142 உறுப்பினர்களை தெரிவுசெய்வதற்கான 3 மாகாண சபைகளினதும் தேர்தல் தொடங்கியது!
வட வடமேல் மற்றும் மத்திய மாகாண சபைகளுக்கு மொத்தமாக 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கான தேர்தல் வாக்களிப்பு இன்று மூன்று மாகாணங்களிலும் உள்ள 10 மாவட்டங்களிலும் ஆரம்பித்துள்ளது.
10 மாவட்டங்களிலும் அமைக்கபட்டுள்ள 3ஆயிரத்து 712 வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை ஏழு மணி முதல் மாலை நான்கு மணிவரை தேர்தல் வாக்களிப்பு நடைபெறும் என்று தேர்தல்கள் செயலகம் அறிவித்துள்ளது.
அந்த வகையில் மூன்று மாகாண சபைகளுக்கும் 142 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்காக 43 இலட்சத்து 58 ஆயிரத்து 261 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் சார்பில் 3ஆயிரத்து 785 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.
குறிப்பாக வட மாகாணசபைக்கு 36 உறுப்பினர்களை தெரிவு செய்யும் நோக்கில் சுயேச்சைக் குழுக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் சார்பில் 906 வேட்பாளர்கள் ஐந்து மாவட்டங்களிலும் களத்தில் குதித்துள்ளனர்.
நாட்டில் மாகாண சபை முறைமை அறிமுகப் படுத்தப்பட்ட பின்னர் வட மாகாண சபைக்கு முதல் தடவையாக தேர்தல் நடைபெறுகின்றமை விசேட அம்சமாகும்.
இந்நிலையில் தேர்தல் பணிகளுக்காக சுமார் 40 ஆயிரம் அரச ஊழியர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளதுடன் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாதுகாப்பு தரப்பினர் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியில் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபாய்
இணைப்பு 02 – கிளிநொச்சி கோணவில் பகுதியில் காலையில் அரசாங்க ஆதரவாளர்கள் வாக்காளர்களுக்கு தலா 500 ரூபா வழங்கி வெற்றிலைக்கு வாக்களிக்குமாறு கோரியுள்ளனர்.
















