மிகத் தெளிவான முடிவை தமிழர் இன்று வழங்குவர்; இராணுவத்தின் பரப்புரை குறித்து சுமந்திரன்

sumanthiran1வடக்கு மாகாண சபைத் தேர்தலில் இருந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விலகியுள்ளது எனக் கூறித் தமிழரை முட்டாள்களாக்க நினைக்கிறது இராணுவம். நாம் ஒரு போதும் விலகவில்லை. மிகத் தெளிவான முடிவை தமிழ் மக்கள் எடுத்துவிட்டார்கள் என்று தெரிவித்தார் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் எம். ஏ.சுமந்திரன்

வடக்கு மாகாணத்தின் பல இடங்களிலும் வீடு வீடாகச் சென்ற இராணுவத்தினர் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தேர்தலில் இருந்து விலகியதாக பரப்புரை செய்கின்றனர். என்று மக்கள் நேற்று உதயனுக்குத் தெரிவித்தனர்.

இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை தொடர்பு கொண்டு கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாண சபைத் தேர்தலில் இருந்து விலகியதாகத் தெரிவிக்கப்படுவதில் எதுவித உண்மையுமில்லை. நாம் இந்தத் தேர்தலில் போட்டியிடுவதில் எந்த மாற்றமும் இல்லை இராணுவத்தினர் வீடு வீடாகச் சென்று தேர்தலைப் பகீஸ்கரிக்குமாறு மக்களை கோரி வருகின்றனர். தமிழ் மக்களை இராணுவத்தினர் முட்டாள்கள் என நினைத்துக் கொண்டு செயற்படுகின்றார்களா?” என்று கேட்டார் சுமந்திரன்

“தமிழ் மக்கள் தேர்தல் பிரச்சாரங்கள் ஊடாக தெளிவான முடிவை எடுத்து விட்டனர். இராணுவத்தினர் குழப்புவதால் எதுவும் ஏற்பட்டு விடப்போவதில்லை”. “மக்கள் சுதந்திரமாகப் பயமின்றி இன்று வாக்களிக்க முடியும். மக்கள் எந்தக் கட்சிக்கும் வாக்களிக்க முடியும் தங்கள் வாக்குரிமைகளை கட்டாயம் எல்லோரும் பயன்படுத்த வேண்டும்”. என்று குறிப்பிடார் சுமந்திரன்.

Tags: , ,

Leave a Reply