தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் பயணித்த வேன் மீது இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வரணி பிரதேசத்தில் புலனாய்வாளர்கள் நடமாடுவதாக கிடைத்த தகவலைத் தொடர்ந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் உறுப்பினர் சம்பவ இடத்திற்குச் சென்றுள்ளனர்.
இதன்போது அங்கிருந்த நபர் வரணி பிரதேசத்திலிருந்து இராணுவ முகாமிற்குள் ஓடியுள்ளார்.
இரண்டு வேன்களில் சென்ற கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் தங்களுடைய வேனில் திரும்பும்போது இராணுவத்தினர்கள் அவர்களுடைய வேனை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
வேன்களுக்கும் இராணுவ முகாமிற்கும் 100 மீற்றர் தூர இடைவெளியில் இந்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இராணுவத்தினர் சுமார் 15 – 20 துப்பாக்கி வேட்டுக்கள் வேனை நோக்கி சுடப்பட்டதாக சம்பவ இடத்திலிருந்த எமது செய்தியாளர் தெரிவித்தார்.
துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகியுள்ள வேனுக்கு முன்னால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரனது வேன் சென்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டின் காரணமாக வேனின் கண்ணாடிகள் உடைந்து வேன் சேதடைந்துள்ளது.
வரணி மகா வித்தியாலய தேர்தல் வாக்குச் சாவடிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்நிலையில் தற்போது வாக்குச்சாவடி நோக்கி வரும் வாக்காளர்களை வாக்களிக்க விடாது பொலிஸார் திரும்பிச் செல்லுமாறு அறிவுறுத்துவதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
தென்மராச்சி, வரணி பிரதேசத்தில் தற்போது பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பொலிஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
வாக்களிப்பு ஸ்தம்பிதம் அடைந்துள்ள அதேவேளை, அங்கிருந்த கடைககள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன.
















