வடமேற்கு பாகிஸ்தானில் பெஷாவர் நகரிலுள்ள தேவாலயமொன்றில் ஞாயிற்றுக்கிழமை இரு தற்கொலைக் குண்டுதாரிகளால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல்களில் 81 பேர் பலியானதுடன் 100 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
கடந்த சில வருடங்களில் பாகிஸ்தானில் கிறிஸ்தவர்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான தாக்குதல் சம்பவமாக இது கருதப்படுகிறது.
காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
தாக்குதல்கள் நடத்தப்பட்ட வேளை அந்த தேவாலயத்தில் சுமார் 400 பேர் வரை இருந்ததாக கூறப்படுகிறது. தாக்குதலையடுத்து குறித்த தேவாலயத்திற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
















