ஜனாதிபதியின் வடக்கு பிரச்சாரமும் அவரது “வாயும்” வடமாகாணசபைத் தேர்தல் படுதோல்விக்கான காரணங்கள்? நொந்துகொள்கிறார்கள் அரசாங்க ஆதரவு தமிழ்கட்சிகள்
தமிழித்தேசிய கூட்டமைப்பு முன்வைத்த தோ்தல் விஞ்ஞாபனம் தொடா்பாக கடும்போக்கு தமிழா்களுக்கு கோபம் இருந்தது. ஆனால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் நடத்திய தோ்தல் பிரசார கூட்டத்தில் கூட்டமைப்பின் தோ்தல் விஞ்ஞாபனம் தமிழ் ஈழத்துக்கு ஒப்பானது என கூறியிருந்தார். அத்துடன் இலங்கையில் சிறுபாண்மை தமிழா்கள் என்று எவரும் இல்லை என்றும் ஜனாதிபதி கூறியிருந்தார்.
இந்த பேச்சுக்களும் தமிழத்தேசிய கூட்டமைப்பு 30 ஆசனங்களை பெறுவதற்கு காரணமாக அமைந்தது என யாழ்ப்பாணத்தில் சிலா் பேசிக்கொள்கின்றனா். கூட்டமைப்பின் தோ்தல் விஞ்ஞாபனத்தை வட்டுக்கோட்டை தீா்மானத்துக்கு ஒப்பிட்டு ஜனாதிபதி பேசியதால் அதில் ஏதோ இருக்கின்றது என்று நினைத்து கூட்டமைப்பை விமர்சித்த தமிழாகளும் கூட்டமைப்புக்கு அமோகமாக வாக்களித்துள்ளதாகவும் ஜனாதிபதி யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற இடங்களுக்கு சென்று தோ்தல் பிரசாரங்களில் பேசியிருக்காது விட்டிருந்தாலே ஐக்கியமக்கள் கூட்டமைப்புக்கு உதவியாக இருந்திருக்கும் எனவும் கூறுகின்றனர்.
ஜனாதிபதியின் இனவாத பேச்சும் தமிழா்களின் போராட்டங்களை கொச்சைப்படுத்தும் கருத்துக்களும் தமிழை பாடமாக்கிவிட்டு வந்து பேசி தமிழ் மொழியை அவமானப்படுத்தியதும் ஒரு காரணம் என்றும் கூறப்படுகின்றது. ஜனாதிபதி வடக்கு மாகாணத்துக்கு பிரசார நடவடிக்கைகளுக்க போயிருக்காது விட்டால் அரசாங்கம் குறைந்தது 10 ஆசனங்களையாவது பெற்றிருக்கும் என கூறிய அந்த தகவல்கள் ஜனாதிபதியின் வாய்தான் இந்த படுதோல்விக்கு காரணம் என்றும் அரசதரப்பு தமிழ் கட்சிகள் மனம் நொந்துகொண்டுதாகவும் தெவிக்கப்படுகின்றது
















