6 வயது குழந்தைக்கு பயிற்சியளித்து அதிர வைக்கும் செயலில் ஈடுபட்ட பிரித்தானிய தம்பதி!

33 வயதான இலி பாரா மற்றும் மார்டா பாரா-ப்ளோஜ் இருவரும் லண்டனில் இருக்கும் Harrods கடைக்கு சென்றுள்ளனர். பின்னர், அங்கிருந்த ஒரு ஆடம்பரமான 18 காரட் ரோஸ்கோல்டு கைக் கடிகாரத்தை அணிந்து புகைப்படங்களை எடுத்துச் சென்றுள்ளனர். பிறகு, அதேபோன்ற மாதிரி கடிகாரத்தாய் 6 வயதே ஆகும் தங்களது மகனின் ஹூடி உடையில் மறைத்து வைத்துக்கொண்டு, அவர்கள் மீண்டும் அக்கடைக்கு வந்துள்ளனர்.

£67,400 விலை மதிப்புள்ள அந்த ஆடம்பர கடிகாரத்தை அணிந்து பார்க்க வேண்டும் என கேட்டு, யாருக்கும் தெரியாமல் மறைத்து வைத்திருந்த போலி கடிகாரத்தை அப்படியே மாற்றி கொடுத்துவிட்டு, அங்கிருந்து குடும்பத்தோடு கிளம்பியுள்ளனர்.

வெகு நேரம் கழித்தி, கடையில் இப்போது இருக்கும் கடிகாரம் டூப்ளிகேட் என்றும், அங்கு என்ன நடந்துள்ளது என்பதும் கடைக்காரருக்கு தெரியவந்துள்ளது. பின்னர், தங்கள் சொந்த நாடான ருமேனியாவுக்கு திரும்ப முயன்ற போது, லண்டனிலிந்து 80 மைல் தொலைவில் உள்ள டோவர் துறைமுகத்தில் அவர்கள் கையும் களவுமாக போலிஸிடம் பிடிபட்டனர்.

விசாரணையில், அவர்கள் தங்களது மகனுக்கு திருதுவதத்திற்கு முக்கிய பங்கு வகிக்கும் அளவிற்கு பயிற்சி அளித்துள்ளனர்.

Southwark crown நீதிமன்றத்தில், ஆறு வயது குழந்தையை திருட்டில் ஒரு முக்கிய அங்கமாகப் பயன்படுத்தி, நன்கு திட்டமிடப்பட்ட மற்றும் துணிச்சலான திட்டத்தை செய்து விலையுயர்ந்த கடிகாரத்தை திருடியதாய் அவர்கள் ஒப்புக்கொண்டனர்.

அதற்காக பாராவுக்கு 18 மாதங்களும், பாரா-ப்ளாஜ்க்கு 8 மாதங்களும் சிறை தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!