வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதும் இருக்கின்றதா?

lk-monksபௌத்த துறவிகளின் பதட்டமும் ஆராச்சியும் தொடர்கிறது…

வடமாகாண சபைக்கு வெளிநாடுகள் நிதிகளை வழங்கும் முறைகள் ஏதுவும் இருக்கின்றதா என அறிவதற்காக பௌத்த பிக்குமார் குழு ஒன்று இலங்கை மத்திய வங்கியின் அதிகாகள் சிலரை சந்தித்து கலந்துரையாடி உள்ளது.

இந்தியாவும் வெளிநாடுகளும் வடமாகாண சபைக்கு நேரடியாக நிதியுதவிகளை வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன என்றும் அது தெடா்பாக விளக்கமளிக்குமாறும் பௌத்த பிக்குகள் கேட்டதாக மத்திய வங்கி தகவல்கள் கூறுகின்றன.

மாகாண சபைகளுக்கு மத்திய அரசே நிதி ஒருக்கீடுகள் செய்ய வேண்டும் என்றும் வெளிநாடுகள் நேரடியாக நிதியுவிகளை செய்ய முடியாது என்றும் விளக்கமளித்ததாக மத்திய வங்கி தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிய சட்டமூலத்தின் படி உருவாக்கப்படவுள்ள திகுநெகும வங்கியின் ஊடாகவே நிதிகள் வழங்கப்படும் என்றும் மத்திய வங்கி பௌத்த துறவிகளிடம் விபரமாக கூறியதாக கொழும்பு தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply