நுவரெலியா – கந்தபளை பகுதி பாடசாலை ஒன்றில் 15 வயது மாணவியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 29 வயது ஆசிரியரை கந்தபளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
நேற்று மாலை குறித்த ஆசிரியர் கைது செய்யப்பட்டதாக கந்தபளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
குறித்த ஆசிரியர் இன்று (25) நுவரெலிய நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பாதிக்கப்பட்ட மாணவி நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
















