செல்வராகவனின் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகிவரும் திரைப்படம் இரண்டாம் உலகம்.
இப்படத்தில் ஆர்யா – அனுஷ்கா ஜோடியாக நடித்துள்ளனர். அண்மையில் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது. இப்படம் தீபாவளிக்கு களமிறங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்திற்கு இசை அமைத்த ஹரீஸ் ஜெயராஜு தற்போது இரண்டாம் உலகம் தவிர்த்து 4 பெரிய பட்ஜெட் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
இதனால் இப்படத்தின் பின்னணி இசையமைப்பு பணிகளிலிருந்து விலகிக் கொண்டுள்ளார் ஹரீஸ். இதனால் ஹரீஸுக்கு பதிலாக ‘கொலைவெறிப் புகழ்’ அனிருத் பின்னணி இசை வழங்க ஒப்பந்தமாகியுள்ளார்.
More cinema news: www.kisukisu.com
















