சினிமாவில் இருப்பவர்களுக்கு காதலி கிடைப்பது கஷ்டம். இதுவரை நான் யாரையும் காதலிக்கவில்லை என்று கூறியுள்ளார் ஆர்யா.
நடிகர் சங்க விவகாரத்தில் இளம் நடிகர்கள் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர். விஷால் ஆரம்பித்த விவகாரம் ஜீவாவைத் தொடர்ந்து ஆர்யாவும் இப்போது வாய் திறந்துள்ளார்.
நடிகர் சங்கம் என்பது அனைவருக்கும் பயன்பட வேண்டும் சர்வாதிகாரம் இருக்கக் கூடாது என்று கூறியுள்ளார் ஆர்யா.
இவர் கூறியதாவது, நான் இதுவரைக்கும் யாரையும் காதலிக்க வில்லை. சினிமாவில் காதலி கிடைப்பது ரொம்ப கஷ்டம். என்னுடையது காதல் திருமணம்தான், வீட்டில் பார்த்தாலும் அந்த பெண்ணை காதலித்துதான் கல்யாணம் பண்ணிப்பேன்.
விஷாலும் நானும் ஒரே தெரு… கல்லூரி நண்பர்கள். இருவரும் நடிக்க வருவோம் என்று நினைக்கவே இல்லை. இப்போது இருவரும் நடிக்கிறோம்.
ராஜா ராணி படத்தில் நயன்தாரா, நஸ்ரியா என இரண்டு நாயகிகளுடன் நடித்துள்ளேன். இதில் நயன்தாரா ஸாஃப்ட், நர்ஸியா கோபப்படுவதில் ஃபாஸ்ட்.
வாழ்க்கையில் எதுவுமே ப்ளான் பண்ணி நடக்கிறதில்லை. எனக்கான பெண்ணை முதல்ல பிடிக்கணும். செட்டாகணும் அப்புறம்தான் திருமணம் பத்தி யோசிக்க முடியும் என்று தெளிவாக கூறியுள்ளார் ஆர்யா.
Visit: www.kisukisu.com
















