கோடம்பாக்கத்தின் ஹாட் ஜோடி என்று ஜெய் – நஸ்ரியா நசீமை சொல்கிறார்கள். இருவரும் காதலிப்பதை கிசுகிசுவிலிருந்து தலைப்புச் செய்திக்கு மாற்றிவிட்டன ஊடகங்கள்.
இந்நிலையில் அப்படி எதுவும் இல்லை என்று பேட்டிளித்துள்ளார் நஸ்ரியா. ஜெய்யுடன் எனக்கு காதல் எதுவும் இல்லை. ஜெய் நல்ல நண்பர். படப்பிடிப்பில் பேசிக் கொள்வோம். ஏதாவது விழாக்களில் சந்தித்துக் கொண்டால் பேசிக் கொள்வோம். அவ்வளவுதான்.
எங்களுக்குள் உள்ள உறவு. காதல் எதுவும் கிடையாது என்று திட்டவட்டமாக தெரிவித்தார். சரி காதல் என்று சொன்னவர்கள் இதற்கு என்ன சொல்கிறார்கள்?
எந்த நடிகை தனது காதலை ஆரம்பத்தில் ஒத்துக் கொண்டிருக்கிறார்? ஜெய், நஸ்ரியா காதலிப்பது உண்மையிலும் உண்மை என்று இல்லாத கற்பூரத்தில் சத்தியம் செய்கிறார்கள்.
Visit: www.kisukisu.com
















