இராணுவத்தை அகற்றினால் மட்டுமே வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் – இந்தியா

gk-vasanஇராணுவத்தை அகற்றினால் மட்டுமே வடக்கில் சமாதானத்தை ஏற்படுத்த முடியும் என இந்திய மத்திய அமைச்சர் ஜீ.கே.வாசன் தெரிவித்துள்ளார். வட மாகாணத்தில் இராணுவ பிரசன்னத்தை குறைப்பதற்கு சகல வழிகளிலும் இலங்கை அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்கத் தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்திய மத்திய அரசாங்கத்தின் அழுத்தம் காரணமாகவே வடக்கில் குறித்த திகதியில் அரசாங்கம் மாகாணசபைத் தேர்தலை நடத்தியதாகத் தெரிவித்துள்ளார்.

வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுவதற்கு இந்தியா ஒத்துழைப்பு வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதன் பின்னரே சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என அவர் தெரிவித்துள்ளார். தமிழ் மக்களுக்கு சம உரிமை வழங்கப்பட வேண்டும் எனவும் அவர்கள் கௌரவமாக நடத்தப்பட வேண்டுமெனவும் இந்தியா கோரி நிற்பதாகத் தெரிவித்துள்ளார். சேது சமுத்திரத் திட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் விரும்புவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

Tags: , ,

Leave a Reply