கந்தகெட்டிய தோட்டப் பகுதி முட்புதருக்குள் வீசப்பட்டிருந்த சிசு ஒன்றினை பிரதேசவாசிகள் மீட்டெடுத்து மடுல்கலை வைத்தியசாலையில் ஒப்படைத்த சம்பவம் ஒன்று இன்று நிகழ்ந்துள்ளதாக பன்வில பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலை வேளையில் தொழிலுக்குச் சென்ற சிலர் மேற்படி புதருக்குள்ளிருந்து சிசு ஒன்றின் அழுகுரல் கேட்கவே அங்கு தேடிப்பார்த்துள்ளனர். இதன்போது குறித்த சிசு அங்கிருந்து மீட்கப்பட்டுள்ளது.
பிரதேசவாசிகள் உடனடியாக மடுல்கலை ஆதார வைத்தியசாலையில் சிசுவை ஒப்படைத்துள்ளனர். சிசுவை பரிசோதித்த வைத்தியர் உடல் நிலையில் பாதிப்பில்லை என்றும் சிசு பாதுகாப்பாக தற்போது கண்டி போதனா வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
















