வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி நிதி மோசடி செய்த பெண் ஒருவர் ஹொரண – மினுவங்கொட பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹொரண உதவி பொலிஸ் அதிகாரி அலுவலக விசேட குற்ற விசாரணை பிரிவினர் குறித்த பெண்ணை கைது செய்துள்ளனர்.
வெளிநாட்டில் வேலை பெற்றுத் தருவதாகக் கூறி நாட்டின் பல பாகங்களிலும் உள்ள நபர்களிடம் இரண்டு கோடி ரூபாவரை குறித்த பெண் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் மீது தொடர்பில் திருகோணமலை, அம்பாறை, கொட்டாவ, பிலியந்தலை, மாத்தளை மற்றும் மஹரகம பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட பெண் ஹொரண – தலகல பகுதியைச் சேர்ந்தவராவார்.
சந்தேகநபர் இன்று (27) ஹொரண நீதவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
















