UNல் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன்சிங் – காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த

Mahinda-Rajapaksa2ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் சந்திப்பை தவிர்த்தார் மன்மோகன் சிங் – காத்திருந்து இலங்கை திரும்பினார் மகிந்த:-

ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக நியூயார்க் சென்றுள்ள இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் சந்திப்பை தவிர்த்தார் எனக் கூறப்படுகிறது.

பிரதமர் மன்மோகன் சிங். நேற்று முன்தினம் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பங்கேற்ற ராஜபக்ச, இலங்கை திரும்புவதற்கு முன்னதாக, மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசலாம் என்று அவரது வருகைக்காக நியூயார்க்கில் காத்திருந்தார்.

ஆனால், வாஷிங்டனில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்தித்துவிட்டு நியூயார்க் புறப்பட்ட பிரதமர் மன்மோகன் சிங், குறிப்பிட்ட நேரத்துக்கு 3 மணி நேரம் தாமதமாக சென்றதால், வேறுவழியில்லாமல் அவரை சந்திக்காமலேயே iனாதிபதி ராஜபக்ச சென்று விட்டார். பிரதமர் மன்மோகன் சிங், அதிகாரபூர்வமற்ற முறையில் இலங்கை ஜனாதிபதி ராஜபக்சவை சந்திக்க விரும்பவில்லை எனத் தெரிகிறது.

Tags: ,

Leave a Reply