த.தே.கூ வுடன் இணைந்து செயற்பட வேண்டும் ; அரசிடம் ஐ.தே.க கோரிக்கை

unpவடக்கு மாகாண சபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கவுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசாங்கம் இணைந்து செயற்பட வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கோரிக்கை விடுத்துள்ளது.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேர்தலில் தோல்வி என்ற காரணத்தைக் கொண்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க பதவியை இராஜினாமா செய்யப் போவதில்லை.

கடந்த மாகாணசபைத் தேர்தலில் கட்சி அடைந்த தோல்வியைக் கருத்திற் கொண்டு ரணில் விக்ரமசிங்க தலைமைப் பதவியை துறக்க வேண்டும் என பலர் கூறிவருகின்றனர். ஆனாலும் அவர் பதவி விலகவேண்டியதில்லை.

எனினும் தேர்தல்களில் அடையும் வெற்றி தோல்விகளுக்கு ஒட்டு மொத்த கட்சியே பொறுப்பு சொல்ல வேண்டும். அதைவிடுத்து தனிப்பட்ட நபர்களின் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்துவதனை ஏற்றுக்கொள்ள முடியாது.

கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வது குறித்து பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதுடன் இவை தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டும் வருகின்றது.

கட்சி வெற்றியீட்டினால் அனைவரின் உழைப்பு காரணமாகவே வெற்றியீட்டியதாக குறிப்பிடும் தரப்பினர், தோல்வியடைந்த உடன் கட்சித் தலைவர் மீது குற்றம் சுமத்துகின்றனர்.

மேலும் இவர்கள் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவினை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply