உலகில் முதல் டுவிட்டர் பாவனையாளர் இயேசு கிறிஸ்துவே என கார்தினால் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்துவின் மதப்போதனைகள் மற்றும் உபதேசங்கள் டுவிட்களைப் போல சுருக்கமானதக இருந்ததாகவும் அதேநேரம் விளக்கமாகதாகவும் இருந்ததாகவும் அக் கார்தினால் தெரிவித்துள்ளார்.
இயேசு கிறிஸ்து அனைவருக்கும் முன்பாக டுவிட் செய்ததாகவும், அவரது பல கருத்துக்கள் 45 எழுத்துக்களுக்கும் குறைவாக இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வத்திக்கானைச் சேர்ந்த கார்தினலான கியான்பிராங்கோ ரவாசியே இக்கருத்தினை வெளியிட்டுள்ளார்.
கியான்பிராங்கோ ரவாசியேவும் டுவிட்டர் கணக்கொன்றினை பேணி வருகின்றார்.அவரது டுவிட்டர் கணக்கில் 56,000 பலோவர்கள் உள்ளனர்.
இந்நிலையில் அவர் இயேசுகிறிஸ்து தொடர்பில் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
இயேசு கிறிஸ்து டுவிட்டருக்கு முன்னோடியானவர் எனவும் தற்கால தொலைக்காட்சி போல ஒரு தகவலை கதையாகவோ அல்லது சின்னத்தினூடாக வழங்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.
















