காரைநகர் தவிசாளர் தெரிவு இன்று!

காரைநகர் பிரதேச சபைக்கு புதிய தவிசாளரைத் தெரிவுசெய்வதற்கான கூட்டம் இன்று புதன்கிழமை காலை 10 மணிக்கு நடைபெறவுள்ளது. காரைநகர் பிரதேச சபை சபா மண்டபத்தில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மாியதாஸ் பற்றிக் நிறஞ்சன் தலைமையில் இடம்பெறும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை (ரெலோ கட்சியை ) பிரதிநிதித்துவப்படுத்தி 2018ஆம் ஆண்டு முதல் தவிசாளராக இருந்த விஜயதா்மா கேதீஷ்வரதாஸ் கடந்த மாதம் 21ஆம் திகதி கோவிட் தொற்று நோய் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையில் மரணமானார்.

இதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கே புதிய தவிசாளரைத் தேர்வு செய்வதற்கான கூட்டம் நடைபெறவுள்ளது.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!