இந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்யத் தீர்மானம்

european-union-flagஇந்திய மீனவர்களின் அத்து மீறல்கள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்திட்ம முறைப்பாடு செய்ய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

தமிழக மீனவர்கள் அதிகளவில் அத்து மீறல்களில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்திய மீனவர் அத்து மீறல் பிரச்சினைக்கு அந்நாட்டு அரசாங்கம் காத்திரமான தீர்வுத் திட்டமொன்றை விரைவில் வழங்கத் தவறினால் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறைப்பாடு செய்ய நேரிடும் என பிரதி மீன்பிடி வள அமைச்சர் சரத் குமார குணரட்ன தெரிவித்துள்ளார்.

இலங்கை கடல் வளங்களை இந்திய மீனவர்கள் அதிகளவில் சுரண்டி வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சர் சல்மன் குர்ஷித் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான மீனவர்கள் எதிர்நோக்கி வரும் பிரச்சினைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சல்மன் குர்ஷித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக மீனவர்கள் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகத் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியமானது என இலங்கை மீனவர்கள் கோரி வருகின்றனர்.

Tags: , ,

Leave a Reply