“ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியிலிருந்து என்னை நீக்க வேண்டும் என்று கூறுபவர்களை வழிநடத்தும் பின்னணியில் அரசின் சூழ்ச்சி இருக்கின்றது. இதற்கு சில ஊடகங்கள் உறுதுணையாக இருப்பது கவலையை ஏற்படுத்துகிறது” என்று ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
எகலியகொட பிரதேசத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் அதிகாரச் சபைக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நான் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் பதவியில் ஏன் தொடர்கிறேன் என்று சிலர் குற்றம் சுமத்தி வருகின்றனர். கட்சியின் நலனுக்காகவே நான் தலைவராக இருந்து வருகிறேன். வேறு எவராவது கட்சியின் தலைவர் பதவியில் இருந்திருந்தால் அவர் மீது சுமத்தப்படும் இப்படியான அவதூறு குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில் கட்சியைக் கைவிட்டுச் சென்றிருப்பார்.
ஐக்கிய தேசியக்கட்சியை கைவிட்டு நான் சென்றுவிட்டால் இந்தக் கட்சியைப் பொறுப் பேற்க எவருமில்லை. எனது நலனுக்காக நான் கட்சியின் தலைவராக இருக்கவில்லை.
கட்சியின் நலனுக்காகவே தலைவர் பதவியில் இருக்கின்றேன். நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து புதிய பயணத்தை மேற்கொண்டு புதிய முறையின் வழியாகக் கட்சியை வெற்றி நோக்கிக் கொண்டு செல்ல வேண்டும்.
சிலர் என்னை விமர்சிக்கின்றனர். சிலர் என்னை சிறந்தவர் என்கின்றனர். என் மீது குற்றம் சுமத்துபவர்கள் எனது அலுவலக அறைக்கு வந்து குற்றச்சாட்டு என்ன என்பதைக் கூறமுடியும். நான் வெளிப்படையானவன். பிரச்சினைகள் இருந்தால் பேசித் தீர்த்து கொள்ள முடியும்.
யஹர்மன் குணரட்ன தொடர்பில் நான் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தேன். துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்துடன் அவர் சம்பந்தப்படுவார் என நான் நினைத்திருக்கவில்லை. எனது மாகாண சபை உறுப்பினரான கிறிஸ் சாந்த புஷ்பகுமாரவுக்கு துப்பாக்கிச் சூட்டுக் காயம் ஏற்பட்டுள்ளது.
அவரை சென்று பார்த்த போது அவர் தெரிவித்த தக வல்களின் அடிப்படையில் நோக் கும் பொழுது அரசின் ஆலோ சகர் ஒருவரும் இதில் சம் பந்தப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது.
நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து எமது குறைகளை நிவர்த்தி செய்து கொள்வோம். அடுத்த சில தினங்களில் நான் எடுக்கப் போகும் நடவடிக்கைகள் பற்றி அறிவிப்பேன் என்றார்.
















