நய்யாண்டி படத்தில் நஸ்ரியாவுக்கு டூப் நடிகையை வைத்து தொப்புளைக் காட்டிய விவகாரம் தற்போது முடிவுக்கு வர உள்ளது. இந்த பிரச்சனையில் நடிகை நஸ்ரியா டைரக்டர் சற்குணம் மற்றும் தயாரிப்பாளர் எஸ்.கதிரேசன் மீது கமிஷனர் அலுவலகத்தில் முறைப்பாடு கொடுத்தார்.
இது குறித்து இயக்குனர் சற்குணம் வெளியிட்ட அறிக்கையில், மீடியா நண்பர்களுக்கு பாடலைத் திரையிட்டுக் காட்டுகிறேன். நஸ்ரியாவும் பாடலைப் பார்த்து பதில் சொல்லட்டும். உறுத்தலாக இருந்தால் அந்தக் காட்சியை நீக்கவும் தயார்´ என்றார்.
இன்று காலையில் நஸ்ரியாவின் தந்தை நசீம் , நஸ்ரியாவின் வழக்கறிஞர், தயாரிப்பாளர், சைபர் க்ரைம் அதிகாரிகள் ´நய்யாண்டி´ படத்தை ஃபோர் பிரேம்ஸ் ப்ரிவியூ தியேட்டரில் பார்த்துள்ளனர். சர்ச்சைக்குரியதாக சொல்லப்பட்ட அந்தக் காட்சி ஆபாசமாக இல்லை என்பது தெளிவாகியுள்ளது.
இதன் பிறகு இருதரப்பினரும் சமரச பேச்சுவார்த்ததையில் ஈடுபட்டுள்ளனர். உறுத்தலான அந்தக் காட்சியும் படத்தில் இருந்து நீக்கப்பட இருக்கிறது. இதனால் நஸ்ரியா, இயக்குனர் சற்குணத்திடம் மன்னிப்பு கேட்டதாக கூறப்படுகிறது.
















