விற்பனைக்கு வந்தது நான் மலாலா

malala-bookதலிபான்களால் சுடப்பட்ட மாணவி மலாலா எழுதிய நான் மலாலா (I AM MALALA) என்ற புத்தகம் விற்பனைக்கு வந்துள்ளது.

பாகிஸ்தானில் பெண் கல்வியை ஊக்குவிப்பதற்காக பிரசாரம் செய்த மலாலா என்ற 15 வயது மாணவியை தலிபான்கள் சுட்டனர். இதில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவருக்கு இங்கிலாந்து அரசு இலவச சிகிச்சை அளித்தது.

தற்போது பூரண குணமடைந்துள்ள அவர் இங்கிலாந்து பிர்மிங்காமில் உள்ள எட்க்பாஸ்டன் என்ற பள்ளியில் சேர்ந்து படித்து வருகிறார்.

பல்வேறு சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார் மலாலா. உலகின் உயரிய பரிசாக கருதப்படும் அமைதிக்கான நோபல் பரிசுக்கு பரிந்துரைக்கப்பட்ட பெயர்களில் மலாலாவின் பெயரும் இறுதி பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தலிபான்களிடம் சிக்கி அனுபவித்த வேதனைகளை ´நான் மலாலா´ என்ற பெயரில் புத்தகமாக வெளியிட மலாலா விரும்பினார்.

இதற்கான உரிமையைப் பெற இங்கிலாந்தை சேர்ந்த வெயிடென்பெல்ட் அண்ட் நிகோல்சன் பதிப்பகம் மலாலாவிடம் 15 கோடி ரூபாய்க்கு கடந்த மார்ச் மாதம் ஒப்பந்தம் செய்தது.

இங்கிலாந்து நூலாசிரியர் கிரிஸ்டினா லாம்ப் எழுதியுள்ள ´நான் மலாலா´ என்ற 276 பக்க புத்தகம் உலக நாடுகளில் நேற்று விற்பனைக்கு வந்தது.

பாகிஸ்தானில் கூட இந்த புத்தகம் விற்பனை செய்யப்படுகிறது.

Tags: , ,

Leave a Reply