லிபியா நாட்டின் பிரதமர் அலி சைடன் மர்ம நபரால் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அந்நாட்டு தலைநகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கியிந்த லிபிய பிரதமரை மர்ம நபர் ஒருவர் துப்பாக்கி முனையில் கடத்தியதாக தெரிகிறது. துப்பாக்கியுடன் ஓட்டலில் நுழைந்த அந்த மர்ம நபர், ஓட்டல் ஊழியர்களை மிரட்டியதாகவும், லிபியா பிரதமரை துப்பாக்கி முனையில் காரில் கடத்தி சென்றதாகவும் கூறப்படுகிறது.
முதலில் பிரதமர் கடத்தப்பட்ட செய்தியை மறுத்த அந்நாட்டு அரசு, பிரதமர் எங்கு இருக்கிறார் என்பது தங்களுக்கு தெரியவில்லை என்றும், அவரை தேடும் பணி முடக்கிவிடப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளது. இந்த மர்மம் குறித்து இன்னும் முழுமையான தகவல் வெளியாகவில்லை.
















