அமெ­ரிக்­காவில் அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத நச்சு மருந்தை ஏற்றி இரு­வ­ருக்கு மரணதண்­டனை

executionஅமெ­ரிக்­காவில் அர­சாங்க அதி­கா­ரி­களால் இது­வரை அங்­கீ­க­ரிக்­கப்­ப­டாத மருந்­தொன்றைப் பயன்­ப­டுத்தி இரு­வ­ருக்கு புதன்­கி­ழமை மரணதண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

அந்தக் கைதி­களின் இறுதி மேன்­மு­றை­யீட்டை உச்சநீதி­மன்றம் நிரா­க­ரித்­த­தை­ய­டுத்தே மேற்­படி தண்­டனை நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளது.

டெக்ஸாஸ் மாநி­லத்தைச் சேர்ந்த மைக்கேல் யொவெல் மற்றும் அரி­ஸோனா மாநி­லத்தைச் சேர்ந்த எட்வர்ட் ஷட் (71 வயது) ஆகி­யோரே மேற்­படி மரணதண்­டனை நிறை­வேற்­றத்­துக்­குள்­ளான கைதி­க­ளாவர்.

போதை­வஸ்தை வாங்­கு­வ­தற்­காக தனது பெற்­றோ­ரி­ட­மி­ருந்து பணத்தைத் திரு­டிய பின்னர் அவர்­களைக் கொன்­ற­தாக மைக்கேல் யொவெல் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது. அத்­துடன் அவர் இதன்­போது எரி­வாயு கொள்­க­லனை திறந்­து­விட்டு தனது வீட்டை வெடிக்க வைத்து கொலை ஆதா­ரங்­களை அழிக்­கவும் முயற்­சித்­துள்ளார். மேற்­படி குற்றச் செயல்­களை மேற்­கொள்­ளும்­போது மைக்கேல் யொவெலின் வயது 28 ஆகும்.

மரணதண்­டனை நிறை­வேற்­றப்­ப­டு­வ­தற்கு ஒரு சில நிமி­டங்­க­ளே­யி­ருந்த நிலையில் எட்வர்ட் ஷட், ”34 வரு­டங்­களின் பின் நான் விடு­த­லை­யாகி வீட்­டிற்கு (விண்­ணுக்கு) செல்லப்போகிறேன். சிறை அதி­கா­ரியே உங்­க­ளுக்கு நன்றி. இவைதான் எனது இறுதி வார்த்­தை­க­ளாகும்” என்று கூறினார்.

1978 ஆம் ஆண்டில் 74 வயது நப­ரொ­ரு­வரைப் படு­கொலை செய்­த­தாக எட்வர்ட் ஷட் மீது குற்­றச்­சாட்டு சுமத்­தப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லையில், யொவெ­லுக்கும் ஷட்­டிற்கும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து அமைப்பால் இதுவரை அங்கீகாரம் வழங்கப்பட்டிராத நச்சு மருந்தொன்றை ஊசி மூலம் ஏற்றி மரணதண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

Tags: , ,

Leave a Reply