இந்தோனேசியாவில் மரண தண்டனையை எதிர்நோக்கும் பிரித்தானிய பெண்மணி!

போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கியுள்ள பிரித்தானிய பெண்மணி ஒருவர் இந்தோனேசியாவின் பாலி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியுள்ளார். தற்போது 65 வயதாகும் லிண்ட்சே சாண்டிஃபோர்ட், கடந்த 2013ல் இருந்தே பாலி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 1.6 மில்லியன் பவுண்டுகள் பெருமதியான போதை மருந்தை இந்தோனேசியாவுக்கு கடத்திய வழக்கில் சிக்கியுள்ளார் லிண்ட்சே சாண்டிஃபோர்ட்.
    
300 கைதிகளை மட்டுமே சிறைவைக்க போதுமான பாலி சிறையில் தற்போது பல நாடுகளை சேர்ந்த 1400 கைதிகள் உள்ளனர். இந்தோனேசியாவில் போதை மருந்து கடத்தல் வழக்கில் சிக்கினால் மரண தண்டனை உறுதி என்பதுடன், துப்பாக்கியால் சுடப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்படும்.

ஆயுததாரிகளான இராணுவ வீரர்கள் குற்றவாளியின் இதயத்தை குறிவைத்து மரண தண்டனையை நிறைவேற்றுவார்கள். ஆனால், அதில் உயிர் தப்பும் கைதியை முக்கிய அதிகாரி தலையில் சுட்டு தண்டனையை நிறைவேற்றுவார்.

இந்தோனேசியா மரணதண்டனையை எப்போதாவது மட்டுமே நிறைவேற்றுகிறது என்பதால், 10 ஆண்டுகளுக்கும் மேலாக மரண தண்டனை கைதிகள் காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டத்தரணி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்த லிண்ட்சே சாண்டிஃபோர்ட், மே 19, 2012ல் தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து பாலிக்கு வந்த நிலையில், அவரது பெட்டிகளில் கோகோயின் போதை மருந்து பெருமளவு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

பாலியில் வசித்துவரும் பிரித்தானிய தம்பதிகளால் தாம் கடத்தல் விவகாரத்தில் ஈடுபட்டதாக அவர் நீதிமன்றத்தில் தெரிவித்தும், குறித்த குற்றச்சாடுகள் நிரூபிக்க முடியாத நிலையில், நீதிமன்றத்தால் ஏற்க முடியாமல் போனது.

இதனையடுத்து அவர் மீதான விசாரணை முடிவில், 2015ல் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அவருடன் மரண தண்டனையை எதிர்நோக்கி 130 கைதிகள் பாலி சிறையில் காத்திருக்கின்றனர்.

இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!