இரண்டு வாரங்களில் பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும்; மனித உரிமை ஆணைக்குழு

HRC-SriLankaஇலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட பரிந்துரைகள் இரண்டு வாரங்களில் அமுல்படுத்தப்பட வேண்டும் என ஆணைக்குழு கோரிக்கைவிடுத்துள்ளது.

அவ்வாறு செய்யத் தவறினால் உரிய நிறுவன அதிகரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சில பரிந்துரைகளை அரச நிறுவன அதிகாரிகள் செயற்படுத்தாது புறக்கணிப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது. இது குறித்து பல முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அதன் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அந்த முறைப்பாடுகள் குறித்து தனியாக விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளது.

இது குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தலைவர் பிரியந்த பெனாண்டோ ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடனும் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். மனித உரிமைகள் ஆணைக்குழு எடுத்துள்ள இத்தீர்மானத்தை சட்ட மூலத்தில் உள்வாங்கிக் கொள்ள சட்ட மா அதிபருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதன் பின் குறித்த சட்ட மூலம் பாராளுமன்றில் சமர்பிக்கப்பட்டு நிறைவேற்றப்படவுள்ளது எனவும் தெரிவித்தார்.

Tags: ,

Leave a Reply