பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துதற்கு TNA எதிர்ப்பு

sumanthiran1பொதுநலவாய நாடுகள் அமைப்பின் தலைவர்கள் அமர்வுகளை இலங்கையில் நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பை வெளியிட்டுள்ளது.

இலங்கையில் எதிர்வரும் நவம்பர் மாதம் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வு நடைபெறவுள்ளது. எனினும், இலங்கையில் பொதுநலவாய நாடுகள் தலைவர்கள் அமர்வுகளை நடாத்துவதனை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் பொதுநலவாய நாடுகள் கொள்கைகள் கோட்பாடுகளை மீறிச் செயற்பட்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் பிரதம நீதியரசரை பொதுநலவாய நாடுகள் அமைப்பின் கொள்கைக்கு விரோதமான முறையில் பணி நீக்கம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.

அமர்வுகளை புறக்கணிப்பதாக கனடா விடுத்துள்ள அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்திய அரசாங்கமும் இதனையே பின்பற்றுவதாகத் தெரிவித்துள்ளார்.

எதற்காக அமர்வுகளை கனடா புறக்கணிக்கின்றது என்பதனை இந்தியா ஆராய்ந்து தீர்மானம் எடுக்க வேண்டுமென சுமந்திரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply