நைஜீரிய தடுப்பு முகாமில் நூற்றுக் கணக்கான கைதிகள் கொல்லப்பட்டள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை குற்றம் சுமத்தியுள்ளது. வடகிழக்கு நைஜீரிய சிறைகளில் இவ்வாறு நூற்றுக் கணக்கான கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர். சனநெரிசல், பட்டினிப் பிணி மற்றும் சட்டவிரோத படுகொலைகள் மூலம் இவ்வாறு கைதிகள் உயிரிழந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மரணங்கள் தொடர்பில் விரிவான விசாரணை நடத்தப்பட வேண்டுமென கோரியுள்ளது.
இதேவேளை, இவ்வாறான குற்றச் செயல்கள் இடம்பெறவில்லை எனவும் மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை எனவும் நைஜீரிய அரச படையினர் தெரிவித்துள்ளனர். குறைந்தபட்சம் 950 பேர் இராணுவக் கட்டுப்பாட்டுச் சிறைகளில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்புகளைப் பேணிய குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டவர்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.
















