சட்டவிரோதமான முறையில் படகு மூலம் அவுஸ்திரேலியாவுக்கு புகலிடம் கோரியவர்களில் 40 பேர் விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
புகலிடக் கோரிக்கையாளர்களான இவர்கள் கிறிஸ்மஸ் தீவில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் நேற்று முன்தினம் திருப்ப அனுப்பப்பட்டனர். நாட்டிற்கு வந்தடைந்தவர்களை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்துள்ளதாக விமான நிலையப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் முல்லைத்தீவு கடலிலிருந்து கடந்த 2007ம் ஆண்டு அவுஸ்திரேலியாலுக்கு படகு மூலம் அரசியல் தஞ்சம் கோரி சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. .
கைது செய்யப்பட்டவர்கள் யாழ்ப்பாணம்.மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்தவர்களாவர். இவர்களில் 12 சிறுவர்கள், 25 பெண்கள் உட்பட யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 38 பேரும், முல்லைத்தீவைச் சேர்ந்த 2 பேருமாக 40 பேர் அடங்குவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் தலா 20 இலட்சம் ரூபா செலுத்தி படகு மூலம் சட்டவிரோதமாக அவுஸ்திரேலியாவுக்குள் சென்றடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கைதான 40 பேரையும் மேலதிக விசாரணைகளுக்காக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளின் நிறைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
















