இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டும்! ஜப்பான்

இலங்கையில் அர்த்தமுள்ள நல்லிணக்கம் ஏற்படுத்தப்பட வேண்டுமென ஜப்பான் தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் ஜப்பானிய பிரதிநிதிகள் இது குறித்து வலியுறுத்தியுள்ளனர்.இலங்கையின் மோசமான பொருளாதார நிலைமைகள் குறித்து கரிசனை கொண்டுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அனைத்து மக்களின் உரிமைகளை உறுதி செய்யக்கூடிய நடவடிக்கைகளை உடன் எடுக்க வேண்டுமென தெரிவித்துள்ளது.அர்த்தமுள்ள நல்லிணக்கம் மற்றும் சிறந்த மனித உரிமை நிலைமைகளை ஏற்படுத்துவதற்கு இலங்கை தன்னார்வ அடிப்படையில் முன்வந்து செயற்பட வேண்டுமென ஜப்பான் சுட்டிக்காட்டியுள்ளது.

பயங்கரவாத தடைச்சட்ட திருத்த யோசனை வரவேற்கப்பட வேண்டியது என தெரிவித்துள்ளது.
உண்மை நல்லிணக்க ஆணைக்குழுவினை உருவாக்கி காலமாறு நீதி பொறிமுறைமை ஏற்படுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டு மற்றும் சர்வதேச தரப்புக்களுடன் இணைந்து பேச்சுவார்த்தை மூலம் மனித உரிமை நிலைமைகளை மேம்படுத்துவதற்கு இலங்கை முனைப்பு காட்ட வேண்டுமென தெரிவித்துள்ளது.
மனித உரிமைகள் மற்றும் பொருளாதார விவகாரங்களில் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்பு வழங்கத் தயார் என சுட்டிக்காட்டியுள்ளது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!