ஈழத் தமிழர்களை இனப்படுகொலை செய்த இலங்கை பொதுநலவாய மாநாட்டிற்கு செல்லக்கூடாது: ஜெயலலிதா

jaya4இலங்கையில் நடைபெற உள்ள காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்க கூடாது என்று பிரதமருக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம் எழுதியுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அவர் இன்று எழுதியுள்ள கடிதத்தில் இவ்வாறு வலியுறுத்தியுள்ளார்.

காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளக்கூடாது என தமிழ்நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், எனவே தமிழ் மக்களின் உணர்வுகளை கருத்தில் கொண்டு மாநாட்டை புறக்கணிக்க வேண்டும் என்றும் அந்த கடிதத்தில் ஜெயலலிதா குறிப்பிட்டுள்ளார்.
இம்மாநாட்டை புறக்கணிப்பதன் மூலம் இலங்கைக்கு இந்தியா அழுத்தம் தரலாம் என்றும் அவர் அதில் கூறியுள்ளார்.

‘ஏற்கனவே மார்ச் மாதம் அனுப்பிய கடிதத்தில், இலங்கை தமிழர்களின் உரிமைகளை பாதுகாக்க இந்தியா முயற்சிக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தேன் என்பதையும் நினைவுபடுத்தியுள்ளார். இலங்கை அரசு ஈழத் தமிழகளுக்கு எதிராக இனப்படுகொலை, போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்குற்றங்களை செய்துள்ளது. காமன்வெல்த் மாநாட்டு அமைப்புக்கான கொள்கைகளை இலங்கை நசுக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், இலங்கையில் நடைபெறும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா பங்கேற்றால், அதன் அனைத்துக் குற்றங்களையும் இந்தியா ஏற்றுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு எதிரான செயலாகவும் ஆகிவிடும்எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகம் சார்பில் அரசியல் கட்சிகளும், மாணவர்கள் அமைப்புகளும் காமன்வெல்த் மாநாட்டை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது. ஏற்கனவே மாநாட்டை புறக்கணிப்பதாக கனடா அறிவித்து விட்டது. அதனைத் தொடர்ந்து இந்தியாவும் காமன்வெல்த் மாநாட்டை புறக்கணிப்பதாக உறுதியோடு அறிவிக்க வேண்டும்’ என்று அக்கடிதத்தில் மேலும் கூறியுள்ளார் ஜெயலலிதா.

Tags: , , ,

Leave a Reply