இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளை புறக்கணிப்பது பொதுநலவாய நாடுகளை அவமதிப்பதாகும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அமர்வுகளை புறக்கணிப்பதாக சில நாடுகள் அறிவித்துள்ள நிலையிலேயே பிரதி வெளிவிவகார அமைச்சர் நியோமல் பெரேரா இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
பொதுநலவாய அமர்வுகளை ஏனைய நாடுகள் புறக்கணித்தால் அது இலங்கைக்கு பாதகத்தை ஏற்படுத்தாது. மாறாக அமர்வுகளை புறக்கணிப்பது பொதுநலவாய நாடுகள் அமைப்பிற்கே அவமரியாதையினை ஏற்படுத்தக் கூடும்.
எனினும், உள்விவகார அரசியல் காரணமாக பொதுநலவாய நாடுகள் அமைப்பில் அங்கம் வகிக்கும் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் அமர்வுகளை புறக்கணிக்கத் தீர்மானம் எடுத்தால் அதனை நாம் மதிக்கின்றோம்.
மேலும் பொதுநலவாய அமர்வுகளை வெற்றிகரமாக முன்னெடுக்க இந்தியா பூரண ஒத்துழைப்பு வழங்கி வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
















