போரில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள வடமாகாணத்தை கட்டியெழுப்பும் பொறுப்பு மத்திய அரசுக்கே உரியது அதன்படி ஏனைய 7 மாகாணங்களுக்கு ஒதுக்கப்படும் நிதித் தொகையிலும் பார்க்க பன்மடங்கு நிதி வடக்கிற்கு வழங்க வேண்டும் என வடக்கு முதலமைச்சர் சி.வி விக்கினேஸ்வரன் தெரிவித்தார்.
புதிதாக தெரிவு செய்யப்பட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான அறிமுக செயலமர்வு இன்று ரில்கோ விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது அதன்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
















