அமெரிக்காவின் உளவுப்பிரிவு நடத்திய உலக நாடுகளின் தலைவர்களின் டெலிபோன் பேச்சு ஒட்டுக்கேட்பு மற்றும் உளவு விவகாரம் விசுவரூபம் எடுத்து வருகிறது. இந்த செயலுக்காக அமெரிக்காவின் தோழமை நாடுகளான பிரான்சு, ஜெர்மனி ஆகியவை போர்க்கொடி உயர்த்தி வருகின்றன. ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்கலின் டெலிபோனை 10 ஆண்டுகளாக ஒட்டு கேட்பதாகவும், இந்த விவகாரம் ஜனாதிபதி ஒபாமாவிற்கு 2010–ம் ஆண்டே தெரியும் என்றும் ஆனாலும் அவர் தடுக்கவில்லை என்றும் பரபரப்பு தகவல் வெளியானது.
ஆனால் இந்த குற்றச்சாட்டை அமெரிக்க அதிகாரிகள் இன்று மறுத்தார்கள். அவருடைய கவனத்திற்கு சென்றதுமே அவர் உளவு பார்ப்பதை நிறுத்த உத்தரவிட்டார் என்றும் தெரிவித்தார்கள்.
இந்நிலையில் ஸ்பெயின் நாட்டு பத்திரிகை இன்று புதிய தகவல் ஒன்றை வெளியிட்டது. அதில் அமெரிக்க உளவுத்துறையினர் ஸ்பெயின் நாட்டில் ஒரே மாதத்தில் சுமார் 6 கோடி டெலிபோன் பேச்சை ஒட்டு கேட்டு இருக்கிறார்கள் என குற்றம் சாட்டியது.
















