வடக்கில் சிங்கள மக்களை மீள்குடியேற்றுங்கள் இல்லையேல் முதலமைச்சர் தெற்கிற்கு வரமுடியாது என்கிறது ராவணா பலய

ravana-balayaவடக்கில் சிங்கள மக்களின் குடியேற்றம் தொடர்பில் வடமாகாண முதலமைச்சர் எதிராக செயற்படுவாரானால் அவரை கொழும்புக்கு வர இடமளிக்கப்பட மாட்டாது என ராவணா பலய அமைப்பு தெரிவித்துள்ளது.

வடக்கில் சிங்களவர்களை குடியேற்றுவதன் மூலம் அந்த மாகாணத்தில் இனப்பரம்பலிலுக்கு பாதிப்பு ஏற்படும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கூறுவாரேயானால் அவர் கொழும்புக்கு வர முடியாது என இராவணா பலய அமைப்பின் செயலாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

அதன்படி விக்னேஸ்வரன் முதலமைச்சர் என்ற வகையில் வடக்கில் குடியிருந்த சிங்கள மக்களை அங்கு மீள்குடியேற்ற வேண்டும். அவர்களை குடியேற்றுவதன் மூலம் இனப் பரம்பலில் மாற்றங்கள் ஏற்படாது.

அத்துடன் புலிகளுக்கு ஆதரவான இந்த குழுவினர் வடக்கில் நிர்வாகத்தை முன்னெடுக்க முடியாது அரசாங்கத்துடன் தொடர்ந்தும் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறு அவர்களாகவே பிரச்சினைகளை ஏற்படுத்திக் கொண்டு அரசாங்கம் தமது நிர்வாகத்திற்கு அழுத்தங்களை ஏற்படுத்துவதாக உலகத்திற்கும் மக்களுக்கும் காட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அழுவதற்கு தருணம் பார்த்து மன்மோகன் சிங்கின் கண்ணை குத்தி அழ வைப்பதற்காக விக்னேஸ்வரன் அவசரமாக இந்தியாவுக்கு செல்லவுள்ளார்.

எனவே நாட்டில் இல்லாத பிரச்சினையை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என அவரிடம் கேட்டுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Tags: , ,

Leave a Reply