சவூதி அரேபியாவில் 3 வயது குழந்தை மீது கூட்டாக வல்லுறவு: மூவர் கைது

saudi-girlசவூதி அரேபியாவைச் சேர்ந்த மூன்று வயதான பெண் குழந்தையொன்றை கடத்திச் சென்ற மூவர், அக்குழந்தையை கூட்டாக பாலியல் வல்லுறவுக்குட்படுத்தியபின் வைத்தியசாலையொன்றுக்கு அருகில் ஆபத்தான விட்டுச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் மூவர் கைது செய்யப்பட்டதாக சவூதி அரேபிய பொலிஸார் நேற்று தெரிவித்தனர்.

ஜெத்தா நகருக்கு அருகிலுள்ள வைத்தியசாலையொன்றில் இக்குழந்தை அழுதுகொண்டிருந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். குடமையான காயங்களுக்குள்ளான இக்குழந்தைக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்படுவதாக வைத்தியசாலை முகாமையாளரான மொஹமட் அலி தெரிவித்துள்ளார்.

‘அவர்கள் மனித ஓநாய்கள் அல்லது மிருகங்களைவிட மோசமானவர்கள். ஆவர்கள் அனைத்து மனிதாபிமான மற்றும் மத விழுமியங்களையும் மீறியுள்ளனர்’ என அவர் கூறியுள்ளார்.

Tags: , ,

Leave a Reply