தமிழக கடலோர பகுதிகளில் இன்று ஆபரேஷன் அம்லா

tamilnadu-seeதீபாவளி நேரத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் குமரி கடலோர பகுதி வழியாக தீவிரவாதிகள் தமிழகத்தில் நுழையலாம் என இந்திய உளவுத்துறை கடந்த சில நாட்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது.

பாட்னாவில் குண்டுவெடிப்பு நடந்த நேரத்தில் இந்த எச்சரிக்கை வெளியானதை அடுத்து தமிழக பொலிசார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.

குமரி கடற்கரை பகுதி மட்டுமின்றி தமிழக கடற்கரைகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி ஒத்திகை பார்க்கும் வகையில் ஆபரேஷன் அம்லா நடத்தப்பட உள்ளது.

இதன்படி கடலோர மாவட்டங்களை சேர்ந்த சட்டம் , ஒழுங்கு பொலிசார், கடலோர காவல் படை, கடற்படையினர், மீன்வளத்துறையினர் ஆகியோர் கூட்டாக இந்த ஒத்திகையில் ஈடுபட உள்ளனர்.

இன்று (31) காலை 6 மணி முதல் 1ம் திகதி மாலை 6 மணி வரை இந்த ஒத்திகை நடைபெறும். இந்த ஆபரேஷனை கடலோர காவல்படை உயர் அதிகாரிகள் மற்றும் கடலோர மாவட்ட எஸ்.பிக்கள் கண்காணிப்பார்கள்.

குமரியில் அம்லா ஆபரேசனில் 250 பேர் ஈடுபடுகின்றனர். இதற்கு முன்பு கடந்த ஜனவரி மாதம் ஆம்லா ஆபரேஷன் நடைபெற்றது.

Tags: , , ,

Leave a Reply