போப் ஆண்டவரின் பேச்சையும் ஒட்டுக் கேட்டதா அமெரிக்கா?

pope-francisஅமெரிக்காவின் உளவு அமைப்பான என்.எஸ்.ஏ. உலக தலைவர்களின் பேச்சை ஒட்டு கேட்டதாக தகவல் வெளியாகி பெரும் புயலை கிளப்பியது.

இந்நிலையில் இத்தாலி நாட்டு பத்திரிகை ஒன்று வாடிகனில் உள்ள போப் ஆண்டவர் உள்ளிட்ட தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக்கேட்கப்பட்டதாகவும், அது குறித்து விவாதிக்கப்படுவதாகவும் தகவல் வெளியிட்டது.

இதற்கு அமெரிக்க உளவு நிறுவனம் மறுப்பு தெரிவித்தது. இதுபற்றி செய்தித் தொடர்பாளர் வானே வினீஸ் கூறும்போது,

‘அதில் உண்மை இல்லை. வாடிகன் புனிதமான இடம். ஆகவே அங்கு ஒட்டு கேட்பு எதுவும் நடக்கவில்லை’ என்றார்.

அதுபோலவே ஐ.நா.வின் தகவல் தொடர்புகளையும் ஒட்டு கேட்கவில்லை என அமெரிக்கா உறுதி அளித்துள்ளது.

Tags: ,

Leave a Reply