அடுத்த விஜயசாந்தி நான்தான்: மிரட்டும் நமீதா!

namithaபொலிஸ் வேடத்தில் நடிக்க வேண்டும் என்றாலே உடல்மொழி ரொம்ப ரொம்ப முக்கியம். இதுவரை நடித்த நடிகைகளைப் பொறுத்தவரை விஜயசாந்திதான் அதற்கு பொருத்தமாக இருந்தார்.

சண்டை காட்சிகளில் அவர் செய்த சாகசத்தை செய்ய அதன்பிறகு எந்த நடிகைகளுக்கும் துணிவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். அப்படியொரு அதிரடி நடிகையாக திகழ்ந்தார் விஜயசாந்தி.

அதன்பிறகு அவர் நடித்த வைஜெயந்தி ஐபிஎஸ் என்ற படத்தின் ரீமேக்கான பவானி ஐபிஎஸ் என்ற படத்தில் சினேகா நடித்தார். ஆனால், விஜயசாந்தி நடித்ததில் பத்தில் ஒரு பங்கைகூட அவரால் வெளிப்படுத்த முடியவில்லை. அதனால் படமும் ஊத்திக்கொண்டது.

இந்த நிலையில், அய்யர் ஐபிஎஸ் படத்தை இயக்கிய அரிராஜன் இயக்கி வரும் இளமை ஊஞ்சல் படத்தில் பொலிஸ் வேடத்தில் நடிக்கிறார் நமீதா.

இதில் தீவிரவாதிகளால் கடத்தப்படும் 5 நடிகைகளை காப்பாற்றும் அதிரடி பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் நமீதா, இதற்காகவே மாதக்கணக்கில் டயட், உடற்பயிற்சியில் ஈடுபட்டு தனது உடம்பை ஸ்லிம் பண்ணி நடித்திருக்கிறார்.

அதோடு, சண்டை காட்சியில் விஜயசாந்தி பாணியில் அதிரடி வேகத்தை பின்பற்றியிருக்கும் நமீதா, இந்த படத்துக்குப்பிறகு என்னைத்தேடி அதிரடி வேடங்கள் நிறைய வரும். அதனால் நான் அடுத்த விஜயசாந்தி ஆனாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை என்று கம்பீரக்குரலில் பேசுகிறார்.

Tags: ,

Leave a Reply