அஜீத்தின் வேகத்தால் கதி கலங்கி நிற்கும் ஹீரோக்கள்!

ajithமங்காத்தா ஹிட்டுக்கு பிறகு தனது பயணத்தில் திடீரென்று வேகம் கூட்டி வருகிறார் அஜீத். வருடத்திற்கு இரண்டு படங்களை கொடுத்து விடுவது என்ற கொள்கையை கடைபிடிப்பவர், ஒரு படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டு வருகிறார்.

அந்த வகையில், ஆரம்பம் படத்தில் நடித்தபோதே வீரம் படத்தில் நடிப்பது பற்றி தெரிவித்தவர், இப்போது வீரம் படத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அதற்கடுத்து கெளதம்மேனன் இயக்கத்தில் நடிக்கயிருப்பது உறுதி செய்துள்ளார்.

இந்த நிலையில், இன்று ஆரம்பம் திரைக்கு வரும் நிலையில்,பொங்கலுக்கு வெளியாக உள்ள வீரம் படத்தின் டரெய்லரை நவம்பர் 5ந் திகதி வெளியிட தயாராகி விட்டார். அப்படத்தின் படப்பிடிப்பும் கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டி விட்டதால், விரைவில் அதை முடித்துக்கொடுத்து விட்டு கெளதம்மேனன் படத்தில் நடிக்க ரெடியாகி விடுவார் என்று தெரிகிறது.

அதுமட்டுமின்றி, கெளதம்மேனன் படத்தையும் வருடக்கணக்கில் இழுத்தடிக்கப்போவதில்லையாம். அதிகபட்சம் ஆறே மாதத்தில் முடித்து விட்டு, அதன்பிறகு புதிய படத்தில் நடிக்கத் தொடங்கி விடுவாராம் அஜீத். அதற்காக இப்போதே சில டைரக்டர்களிடம் கதை கேட்டு வைத்திருக்கும் அஜீத், கெளதம் இயக்கத்தில் நடித்துக்கொண்டிருக்கும்போதே அப்படம் பற்றி அறிவித்து விடுவாராம்.

அஜீத்தின் இந்த திடீர் வேகம் அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியிருக்கிறது. ஆனால் போட்டி நடிகர்களுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: ,

Leave a Reply