விநாயகர் கார்ட்டூன்: இந்து அமைப்புகள் கடும் கண்டனம்!

ganapathy-cartoonஇந்தியா – தென் ஆப்ரிக்கா சுற்றுத் தொடர் குறித்து வரையப்பட்ட கார்டூனுக்கு இந்து அமைப்புகளிடமிருந்து கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளன.

தென் ஆப்ரிக்காவின் சண்டே டைம்ஸ் பத்திரிகையில் சமீபத்தில் கார்ட்டூன் ஒன்று வெளியானது.

விநாயகரின் ஒரு கையில் கிரிக்கெட் பேட்டும், மற்றொரு கையில் பணக்கட்டுக்களும், பலிபீடத்தில் சி.எஸ்.ஏ.,யின் தலைமை நிர்வாக அதிகாரியை பலி கொடுப்பது போன்றும் உள்ளது.

விநாயகரை பி.சி.சி.ஐ.,போன்று சித்தரித்து இந்திய சுற்றுப்பயணத்தின் மூலம் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி லாபமடைவதற்காக,சி.எஸ்.ஏ.,யின் தலைமை நிர்வாக அதிகாரி ஹாரூன் லோகர்ட்டை பலி கொடுக்கத் தயாராக இருப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது.

பிரபல அரசியல் கார்ட்டூனிஸ்ட்டான ஜொனாதன் ஷாப்பிரோ இந்த கார்ட்டூனை வரைந்துள்ளார்.

இது இந்துக்களின் மனதை காயப்படுத்தும் வகையில் வரையப்பட்டுள்ளதாக தென் ஆப்ரிக்க இந்து தர்ம சபா, இந்து மகாசபா மற்றும் அங்குள்ள தமிழ் சங்கம் ஆகியவை கண்டனம் தெரிவித்துள்ளன.

மேலும் குறித்த பத்திரிக்கை மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளன.

இதுகுறித்து பத்திரிகை ஆசிரியர் பிலிசியா ஓபலேட், கிரிக்கெட்டின் நிலையை தான் வரைந்துள்ளோம், இந்துக்களை காயப்படுத்தும் வகையில் கார்ட்டூன் வரையவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Tags: , , , ,

Leave a Reply