ஏற்கனவே இந்த வருஷத்துல சிம்புவுக்கு எந்த படமும் ரிலீஸ் ஆகாத அதிர்ச்சி ஒருபுறம் அவர் மனதை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் அவர் கடந்த இரண்டு வருடங்களாக பிச்சி பிச்சி கால்ஷீட் கொடுத்து நடித்து வரும் ‘வேட்டை மன்னன்’ படம் ட்ராப்பாகி விட்டது என்ற செய்தியைக் கேட்டு கூடுதலாக அதிர்ச்சியடைந்திருக்கிறா
இதுதான் இப்போதைக்கு “இதென்னப்பா எனக்கே தெரியாத செய்தி” என்று சிம்பு தன் நெருங்கிய வட்டாரங்களில் சொல்லிச் சிரிக்கும் லேட்டஸ்ட் செய்தியாம்.
சிம்புவின் கைவசம் இருப்பது இப்போதைக்கு வெளிக்கம்பெனி படங்கள் என்றால் அது வாலுவும், வேட்டை மன்னனும் தான். இந்த இரண்டு படங்களையும் நிக் ஆர்ட்ஸ் சார்பில் சக்கரவர்த்தி தயாரித்து வருகிறார்.இந்நிலையில் சிம்பு தனது சொந்த தயாரிப்பில் பாண்டிராஜ் டைரக்ஷனில் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருப்பதால் ‘வேட்டை மன்னன்’ படத்துக்கு சிம்பு டிமிக்கி கொடுத்து விட்டார் என்றும், அந்தப்படத்தின் டைரக்டர் சிம்புவின் ‘டிமிக்கி’ நடவடிக்கையால் நொந்து போய் ‘வேட்டை மன்னன்’ படத்தை ட்ராப் செய்யும் அளவுக்கு போய் விட்டார் என்றும் செய்திகள் வெளியாகி இருந்தன.ஆனால் இதைப்பற்றி விசாரித்தால் ‘வேட்டை மன்னன்’ படம் டிராப் ஆவதற்கு 100 சதவீதம் வாய்ப்பே இல்லை என்று தயாரிப்பு தரப்பில் உறுதியான தகவல்களைச் சொல்கிறார்கள்.’வாலு’ படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிந்து விட்டது. அதேபோல ‘வேட்டை மன்னன்’ படத்தின் படப்பிடிப்பும் 60 சதவீதம் முடிந்து மீதி 40 சதவீதம் தான் பாக்கி இருக்கிறது. இப்போது ‘வாலு’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடைபெற்று வருவதால் ‘வேட்டை மன்னன்’ படப்பிடிப்பை கொஞ்சம் தள்ளி வைத்திருக்கிறார்கள்.
அந்த இடைவெளியில் தான் சிம்பு தனது சொந்தக் கம்பெனியில் தயாராகும் படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார். டைரக்டர் பாண்டிராஜும் 58 நாட்களில் அந்தப்படத்தை முடித்துக் கொடுத்து விடுவதாக சொல்லியிருப்பதால் ‘வேட்டை மன்னன்’ படம் ட்ராப்பாகும் பேச்சுக்கே இடமில்லை என்று தயாரிப்பு தரப்பில் அடித்துச் சொல்கிறார்கள்.
பயபுள்ளை யாரோ தப்பா நியூஸ் சொல்லிருக்கான் போலிருக்கு…
















