பேஸ்புக்கின் வருவாய் உயர்வு

facebookபேஸ்புக் நிறுவனம் தனது வருவாய் 60 வீதத்தால் உயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளது.

இதன்மூலம் அந்நிறுவனத்தின் வருவாய் மூன்றாம் காலாண்டுப் பகுதியில் 2.02 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது.

மேலும் 425 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலாபமாக அந்நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளது.

விளம்பரங்கள் மூலமான வருவாயாக 1.8 பில்லியன் அமெரிக்க டொலர்களை பேஸ்புக் பெற்றுக்கொண்டுள்ளதுடன் இது 66 வீத அதிகரிப்பென பேஸ்புக் சுட்டிக்காட்டுகின்றது.

பேஸ்புக்கினை மொபைல் சாதனங்கள் ஊடாக பாவிப்போரின் எண்ணிக்கை கடந்த சில காலங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது.

இதனை பேஸ்புக் வெகுவாக ஊக்குவிக்க ஆரம்பித்துள்ளது. மொபைல் விளம்பரங்கள் ஊடாக பெரும் வருவாயை பேஸ்புக் பெற்று வருகின்றது.

அந்நிறுவனத்தின் தகவலின் படி பேஸ்புக்கினில் உள்ள 1 பில்லியனுக்கும் அதிகமான பாவனையாளர்களில் 874 மில்லியனுக்கும் அதிகமானோர் பேஸ்புக்கினை மொபைல் சாதனங்கள் ஊடாக உபயோகிக்கின்றனர்.

பேஸ்புக் நிறுவனத்தின் ஸ்தாபகர் சூக்கர் பேர்க் அண்மையில் மாநாடொன்றில் உரையாற்றும் போது பேஸ்புக் ஒரு மொபைல் நிறுவனம் என வர்ணித்திருந்தார்.

எனினும் மொபைல் விளம்பரப் பிரிவில் கூகுளே இன்னும் ஜாம்பவானாக உள்ளது.

இக்காலாண்டில் மொபைல் விளம்பரங்கள் ஊடாக அந்நிறுவனம் பெற்றுக்கொண்ட வருவாய் 880 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

Tags: ,

Leave a Reply