விஷாலின் நான் சிகப்பு மனிதன் – பர்ஸ்ட் லுக்

vishal-nsm1983 ல் வெளியான ரஜனியின் ப்ளாக்ஸ் பஸ்டர் படம் நான் சிகப்பு மனிதன். தங்கையை கற்பழித்து அவளின் தற்கொலைக்கு காரணமானவனை மட்டுமின்றி அதேபோன்ற அட்டூழியங்களை தனது அடையாளத்தை மறைத்து தட்டிக் கேட்கும் ஹீரோவின் கதை. பாக்யராஜ் முக்கியமான வேடத்தில் நடித்திருப்பார். ரஜினிக்கு கல்லூரிப் பேராசிரியர் வேடம்.

அதே, நான் சிகப்பு மனிதன் பெயாpல் தயாராகிறது விஷால் நடிக்கும் புதிய படம். விஷாலுக்கு ஒரு சூப்பர் ப்ளாப்பையும், ஒரு சுமாரான ப்ளாப்பையும் தந்த திருதான் படத்தின் இயக்குனர். இப்போது ஒரு சின்ன பிளாஷ்பேக்.

விஷால் ஃபிலிம் ஃபேக்டரி சார்பில் விஷால் தயாரித்த முதல் படம் பாண்டிய நாடு. அடுத்தப் படத்தை திரு இயக்க ஜெய் நடிப்பார் என கூறப்பட்டது.

இப்போது அந்த புராஜெக்டில் ஜெய்க்குப் பதில் விஷாலே நடிக்கிறார். தயாரிப்பு அதே விஷால் ஃபிலிம் ஃபேக்டரி. இணை தயாரிப்பு யுடிவி.

இந்த புதிய நான் சிகப்பு மனிதனில் விஷால் ஜோடியாக லட்சமி மேனன் நடிக்கிறார். பாண்டிய நாடு படத்தில் நடித்த பிறகு விஷாலின் பிடித்தமான நடிகையாகிவிட்டார் லட்சுமி மேனன்.

தமன் இமசையமைக்க ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்கிறார். நவம்பரில் படப்பிடிப்பு தொடங்குகிறது. 2014 ஏப்ரலில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Tags: ,

Leave a Reply